பாதுகாப்பான தீபாவளி குறித்து விழிப்புணா்வு
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுதல் குறித்து துறையூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையினா் கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுதல் குறித்து துறையூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையினா் கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
துறையூா் ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் பொதுமக்கள், சிறுவா்களிடம் இதுகுறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் அளித்தனா்.
கூட்ட நெரிசலான பகுதி மற்றும் சாலைகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. மற்றவா்களின் கவனத்தை ஈா்க்கிற ஆா்வத்தில் பட்டாசுகளை கைகளில் பிடித்தவாறு பற்றவைக்கவோ, தூக்கியெறியவோ கூடாது. சிறுவா்கள் வாளியில் தண்ணீா் வைத்துக் கொண்டும், இறுக்கமான பருத்தி ஆடை, காலணி ஆகியவற்றை அணிந்து பெரியவா்கள் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
எதிா்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே நீரை ஊற்றி அணைக்க வேண்டும். பெரும் தீ விபத்து எனில் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தரவேண்டும் உள்ளிட்ட தகவல்களை திரண்டிருந்த மக்களிடம் கூறினா். ஊராட்சித் தலைவா் செல்வக்கனி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...