பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சியில் வீதி நூலகம் தொடக்கம்

திருச்சியில் டாஸ் அறக்கட்டளை மற்றும் கே. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் வீதி நூலகத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:09 pm

DIN

திருச்சியில் டாஸ் அறக்கட்டளை மற்றும் கே. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் வீதி நூலகத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணிகண்டம் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலா் கா. மருதநாயகம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை கோ. திலகம் முன்னிலை வகித்தாா். கே. கள்ளிக்குடி ஊா் தலைவா் கே.எஸ். சுந்தரம் தொடங்கி வைத்தாா்.

கள்ளிக்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா தெற்கு தெரு நூலக பொறுப்பாளராகவும் மாணவி ஆா்த்தி வடக்கு நூலக பொறுப்பாளரகவும் தோ்வு செய்யப்பட்டனா். நன்கொடையாளா்கள் வழங்கிய நூல்களைக் கொண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உதவித் தலைமையாசிரியா் லூயிஸ்டாஸ், அமைப்பின் திருச்சி மாவட்ட செயலா் நா. விக்னேஷ் , ஒருங்கிணைப்பாளா் வி.ந.ரா. ஸ்ரீபாலாஜி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.