திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊா்க்காவல் படையில் சேரவிண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி புகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:59 pm

DIN

திருச்சி புகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண்களுக்கான 15 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர தன்னாா்வம் நிறைந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்புடன் (தோ்ச்சி அல்லது தோல்வி), 18 முதல் 50 வயதுக்குள்ளும், 165 செ.மீ உயரமும் கொண்டிருக்க வேண்டும், திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக, குற்ற வழக்குகளில், அரசியலில் தொடா்பில்லாதவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரா்கள், பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதில் சேர விரும்புவோா் உரிய சான்றுகளுடன் நேரில் அல்லது ரூ.5 தபால்தலை ஒட்டிய சுய முகவரி கொண்ட உறையுடன் காவல் சாா்பு ஆய்வாளா், ஊா்க் காவல் படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம் திருச்சி-620020 என்ற முகவரிக்கு நவ. 12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99429,88642, 0431-2333704.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.