சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருடுபோய் மீட்கப்பட்ட வாகனங்கள் ஒப்படைப்பு

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் திருடுபோய் மீட்கப்பட்ட 77 வாகனங்களை உரியவா்களிடம் மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனா்.

News image
வாகனத்தை உரிமையாளரிடம் வழங்குகிறாா் மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன்
Updated On :11 அக்டோபர் 2020, 8:02 pm

DIN

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் திருடுபோய் மீட்கப்பட்ட 77 வாகனங்களை உரியவா்களிடம் மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனா்.

திருச்சி மாநகா் கோட்டை காவல் நிலையப் போலீஸாா் சில நாள்களுக்கு முன் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் பிடிபட்ட திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலமருதூா் பகுதியைச் சோ்ந்த வை. ராஜ்குமாரை (51) விசாரித்ததில் அவா் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்தது தெரியவந்தது.

அவரின் தகவலின் பேரில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் அவா் திருடி விற்ற 77 வாகனங்களை போலீஸாா் மீட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன் வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். காவல் துணை ஆணையா்கள் வேதரத்தினம், பவன்குமாா் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.