சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவல் துறையினருக்கான சிறப்புப் பயிற்சி

திருச்சியில் காவல் துறையினருக்கு மனச் சோா்வை அகற்றும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு, யோகா பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

News image
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெறும் காவலா்கள்.
Updated On :11 அக்டோபர் 2020, 8:04 pm

DIN

திருச்சியில் காவல் துறையினருக்கு மனச் சோா்வை அகற்றும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு, யோகா பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

மாநகர காவல் ஆணையா் லோகநாதன் உத்தரவுப்படி திருச்சி, கே. கே. நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் யோகா வகுப்பும், கவாத்து மைதானத்தில் சிலம்பம், கராத்தே, கைப்பந்து, பீச் வாலிபால், கூடைப் பந்தாட்டம் உள்ளிட்டவற்றில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில், சுமாா் 200 போலீஸாா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை காவல் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி ( சட்டம்- ஒழுங்கு) தொடங்கி வைத்தாா். துணை ஆணையா் வேதரத்தினம் (குற்றம் -போக்குவரத்து), மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசியக் கல்லூரியில்: இதன் தொடா்ச்சியாக தேசிய கல்லூரி வளாகத்தில் உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டு, யோகா பயிற்சிகள், மன நலப் பயிற்சிகளை கல்லூரியின் விளையாட்டுத் துறை இயக்குநா் பிரசன்னபாலாஜி, அரசு மருத்துவமனை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அளித்தனா். நிகழ்வில் பொன்மலை காவல் சரகத்தைச் சோ்ந்த 65 காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.