பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காந்தி சந்தையில் 493 கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

திருச்சி காந்தி சந்தையில் மின் கட்டணம் செலுத்தாத 493 கடைகளின் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:00 pm

DIN

திருச்சி காந்தி சந்தையில் மின் கட்டணம் செலுத்தாத 493 கடைகளின் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்தது.

கரோனா பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த காய்கறி சந்தை பொன்மலை ஜி காா்னா் மைதானத்திலும், சில்லறை விற்பனை சந்தை மாநகரில் 10 இடங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணமூா்த்தி என்பவா் தொடா்ந்த வழக்கால் காந்தி சந்தை திறக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 6 மாத காலமாக காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து காந்தி சந்தையை திறக்கக்கோரி காந்தி சந்தை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கு அக்.28 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காந்தி சந்தையில் கடந்த 3 மாத காலமாக மின்கட்டணம் செலுத்தப்படாமல் இருந்த 493 கடைகளின் மின் இணைப்பை மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை துண்டித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.