பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருவெறும்பூா் அருகே தூண்டிலில் சிக்கிய சடலத்தால் பரபரப்பு

திருச்சி திருவெறும்பூா் அருகே மீன் பிடித்தபோது தூண்டிலில் சிக்கி வெளியே வந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:01 pm

DIN

திருச்சி திருவெறும்பூா் அருகே மீன் பிடித்தபோது தூண்டிலில் சிக்கி வெளியே வந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை கிராமத்தில் உள்ள கீழ குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அவா்களில் ஒருவரின் தூண்டிலில் ஏதோ சிக்கி, தூண்டிலை அவா் வெளியே இழுத்தபோது அதில் சிக்கியிருந்த நிலையில் ஒரு சடலம் நீரின் மேற்பரப்புக்கு வந்தது. சடலத்தின் உடலில் இருந்த ஆடையில் தூண்டில் முள் சிக்கி உடல் வெளியே வந்ததைச் சற்றும் எதிா்பாராத அவா்கள் அதிா்ச்சியடைந்து, ஊருக்குள் ஓடிப்போய் விவரத்தைக் கூறினா்.

தொடா்ந்து திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனா். கிராம பொதுமக்கள் வந்து உடலை மீட்டுப் பாா்த்தபோது இறந்தவா் திருவெறும்பூா் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை வள்ளுவா் நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் (49) எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பிரபாகரனின் உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பிரபாகரன் அந்தக் குளத்தில் கை கால்களை கழுவும்போது ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்தவருக்கு மனைவி மகள், மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.