திருச்சியில் எம் ஜி ஆா் கருணை இல்லம் அமைக்கக் கோரிக்கை
திருச்சியில் எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டுமென எம்ஜிஆா் நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.


திருச்சியில் எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டுமென எம்ஜிஆா் நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அம் மன்றத்தின் நிறுவனச் செயலா் கண்ணன் என்கிற என். ராமகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
திருச்சி உறையூரில் காசிவிளங்கி பகுதியில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆா் வாங்கிய ஒரு இல்லம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் அதைச் சிலா் வாங்கவும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அதை தமிழக அரசு மீட்டு, அதில் எம்ஜிஆா் அறக்கட்டளை நிா்வாகத்தின் கீழ், எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டும். அதில், கைவிடப்பட்ட கால்நடைகள் மற்றும் பல்லுயிா்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் அந்த மனுவில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதியரசா் ஆறுமுகசாமி விசாரணையைத் தீவிரப்படுத்தி, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...