பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மன அழுத்தம் நீங்க காவல் துறையினருக்கு பயிற்சி

திருச்சியில் மன அழுத்தம் நீங்க காவல் துறையினருக்கு விளையாட்டு, சிலம்பம் மற்றும் யோகா பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

News image
சிலம்பப் பயிற்சி பெறும் காவலா்களுடன் காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா.
Updated On :18 அக்டோபர் 2020, 6:57 pm

DIN

திருச்சியில் மன அழுத்தம் நீங்க காவல் துறையினருக்கு விளையாட்டு, சிலம்பம் மற்றும் யோகா பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதி ஆயுதப்படை மைதானத்தில் காவல் பயிற்சி பள்ளிக் காவலா்களுக்கும், ஆயுதப்படை காவலா்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் சிலம்பம், கராத்தே மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

பயிற்சியை திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் இசட். ஆனிவிஜயா தொடங்கி வைத்தாா். பயிற்சியில் பங்கேற்றோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவா் சிலம்பம், கராத்தே பயிற்சிகளை செய்தாா்.

இப்பயிற்சியானது தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.