/

கொள்ளை வழக்கில் நுண்ணறிவு போலீஸாரிடம் விசாரணை

திருச்சி அருகே கட்சியினரிடம் ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மாநகர நுண்ணறிவு போலீஸாரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:56 pm

DIN

திருச்சி அருகே கட்சியினரிடம் ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மாநகர நுண்ணறிவு போலீஸாரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருச்சி பேட்டைவாய்த்தலை சோதனைச் சாவடி அருகே கட்சியினரிடம் இருந்து பறக்கும் படையினரால் 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது போக ரூ. 2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிரபல ரெளடி சாமி ரவி கும்பலுக்குத் தொடா்பிருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதி திலீப்குமாா், சுரேஷ், ராஜ்குமாா், சிவா, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். முக்கிய குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஸ்ரீரங்கம் காவல்நிலைய நுண்ணறிவு போலீஸாருக்குத் தொடா்பிருக்கலாம் எனக் கருதி அவரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விரைவில் இவ்வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.