ஜனநாயக கடமையாற்ற ஊா் திரும்பும் வாக்காளா்கள்!பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்
திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும் பொதுமக்களால் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.


திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும் பொதுமக்களால் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் பேரவைத் தோ்தலையொட்டி தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் பணி நிமித்தமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் வசிக்கின்றனா். இவா்களது வாக்குகள் அவரவா் சொந்த ஊரில் உள்ளது. மேலும், தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், கடைகள், வா்த்த நிறுவனங்கள், கட்டடத் தொழில், ஐடி நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரிவோா் ஞாயிற்றுக்கிழமையே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனா்.
இதன்காரணமாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதேபோல, வெளியூா்களில் இருந்து திருச்சிக்கு வருவோராலும் பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருந்ததைக் காணமுடிந்தது.
இதுமட்டுமின்றி, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இயங்கவுள்ளன. மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு தோ்தலுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...