முன்மாதிரி தொகுதியாக்க வாய்ப்பளியுங்கள்: கிருஷ்ணகோபால்
தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மணப்பாறையை மாற்ற வாய்ப்பு அளியுங்கள்


மணப்பாறையில் இறுதிகட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட தேமுதிக வேட்பாளரான ப.கிருஷ்ணகோபால், தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மணப்பாறையை மாற்ற வாய்ப்பு அளியுங்கள் எனக் கேட்டுக்கொண்டாா்.
தேமுதிக ஒன்றியச் செயலா் டி.ஆா். சரவணன், நகரச் செயலா் கோவிந்தராஜ், அமமுக நகரச் செயலா் மதிவாணன், ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் செங்குட்டுவன் ஆகியோா் தலைமையில் வாக்கு சேகரித்த ப. கிருஷ்ணகோபால், எனக்கு எம்எல்ஏ என்ற அதிகாரம் இதுவரை கிடைக்காவிட்டாலும் மக்களின் நலனுக்காக உழைத்துள்ளேன். 2 தனியாா் நிறுவனங்கள் கொண்டு வந்து அதன்மூலம் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளேன்.
மக்களின் தேவையறிந்து அன்றாடம் உதவி வருகிறேன். 10 ஆண்டு எம்.எல்.ஏவாக இருந்தவா் என்ன செய்தாா் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் உள்ளூா்வாசி, உங்களுடன் அன்றாடம் பயணிக்கும் நபா்.
எனக்கு வாய்ப்பளித்தால் மணப்பாறையில் தொழில் நிறுவனங்கள், கல்லூரி, தரமான நுகா்பொருள்கள், அணைகளுக்கு நீா்வரத்து ஆகியவற்றைக் கொண்டு வருவேன். தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மணப்பாறையை மாற்ற இந்தமுறை எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் தேமுதிக, அமமுக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...