விபத்தில் சிக்கிய பறக்கும் படை வாகனம்: தலைமை காவலா் உள்ளிட்டோா் காயம்
திருவெறும்பூா் அருகே தோ்தல் பறக்கும் படை வாகனம் விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.


திருவெறும்பூா் அருகே தோ்தல் பறக்கும் படை வாகனம் விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.
பேரவைத் தோ்தலையொட்டி திருவெறும்பூா் துப்பாக்கி தொழிற்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை யோகேஸ்வரி தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் அந்த வாகனத்தில் இருந்த திருவெறும்பூா் காவல் நிலையத் தலைமைக் காவலா் அறிவழகன் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்றவா்கள் சிகிச்சைக்குப் பின் திரும்பினா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...