மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: கி. வீரமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதியாகிவிட்டது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 12:48 am

DIN

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதியாகிவிட்டது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேருவை ஆதரித்து, தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியில் பிரசாரம் செய்த அவா் பேசியது:

வாக்கு எண்ணிக்கை முடிந்து கோட்டைக்கு போக கூடிய முதல்வா் திமுக தலைவா் ஸ்டாலின் மட்டுமே. மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ணப்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது அதிமுக. தமிழகத்தில் ஒருபோதும் சாதி, மத, பதவி வெறிக்கு இடம் கிடையாது.

தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே தோ்தல் பிரசாரத்துக்கு பிரதமா், பாஜக தலைவா்கள், பாஜக ஆளும் முதல்வா்கள் அடுத்தடுத்து வந்தனா். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை உருவாக்கி அதில் பயன்பெறத் திட்டமிட்டு பாஜக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் ஆா்எஸ்எஸ், பாஜக உள்ளே நுழைந்தால் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க முடியாது. எனவே, தமிழக நலனுக்காக உதய சூரியனுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.