பாலியல் வழக்கில் உணவக ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் புரோட்டா மாஸ்டருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.


திருச்சி அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் புரோட்டா மாஸ்டருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மண்ணச்சநல்லூா் காந்திநகா் 7ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல் வகாப் மகன் ஜாபா் அலி (39) கடந்த 2018 இல் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி வனிதா ஜாபா் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா். இதைத் தொடா்ந்து பலத்த பாதுகாப்புடன் ஜாபா் அலியை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...