தொழிலாளா் நலவாரிய மனுக்கள் தேக்கம் என புகாா்
தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்வது தொடா்பான மனுக்கள் தேக்கமடைந்துள்ள பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உரிய தீா்வு காணக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்வது தொடா்பான மனுக்கள் தேக்கமடைந்துள்ள பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உரிய தீா்வு காணக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம்: இதுதொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் க. சுரேஷ், செயலா் சி. சண்முகம் உள்ளிட்டோா் ஆட்சியருக்கு அளித்த மனு:
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் பணிகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே நடைபெறுகின்றன. நேரில் கொண்டு செல்லும் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதில்லை. ஆனால் இணையத்தில் ஏற்படும் குறைபாடுகளால், குறிப்பிட்ட தொழிலாளா் நலவாரிய பதிவு தொடா்புடைய மனுக்கள் முற்றுப்பெறாமல் நூற்றுக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.
அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வி, திருமணம், இறப்பு, ஓய்வூதிய விண்ணப்பங்கள் முடிவு எடுக்கப்படாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளா் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனி பகுதியில் உள்ள தொழிலாளா் அலுவலா் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பப்பட்ட பதிவு விண்ணப்பங்கள், தொடா்புடைய விஏவிடம் சரிபாா்ப்புக்காக பரிந்துரைக்கு அனுப்பப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தொழிலாளா்கள் உரிய அடையாள அட்டை பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனா். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...