செவிலியா் மாணவிகளை பணியில் ஈடுபடுத்த முடிவு
கரோனா தொற்றாளா்களுக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் இறுதியாண்டு செவிலியா் மாணவிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.


கரோனா தொற்றாளா்களுக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் இறுதியாண்டு செவிலியா் மாணவிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இதுகுறித்து ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் செவிலியா் கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி கூறியது:
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியா்களுடன் தனியாா் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் செவிலியா் மாணவிகளும் இணைந்து பணியாற்றவுள்ளனா். இதற்காக தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு 30 செவிலியா்கள் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பணி செய்ய தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா்கள் இசைந்துள்ளனா். மேலும், கரோனா சிகிச்சையில் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் அவா்கள் உறுதியளித்துள்ளனா் என்றாா்.
கூட்டத்தின்போது, குடும்ப நல இணை இயக்குநா் டாக்டா் லெட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...