மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

என்ஐடியில் கருத்தரங்கம் தொடக்கம்

திருச்சி என்ஐடியில் இணைய வழியில் 3 நாள்கள் நடைபெறும் வேதித் தொழில்நுட்ப கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:04 pm

DIN

திருச்சி என்ஐடியில் இணைய வழியில் 3 நாள்கள் நடைபெறும் வேதித் தொழில்நுட்ப கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி தேதிய தொழில்நுட்பக் கழக வேதித் தொழில்நுட்பத் துறை, திருச்சி என்ஐடி வேதித் தொழில்நுட்பச் சங்கம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கை என்ஐடி இயக்குநா் டாக்டா் மினி ஷாஜி தாமஸ் தொடக்கி வைத்துப் பேசுகையில், அல்கெமி கருத்தரங்கு 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஆண்டுதோறும் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன் பெறுகின்றனா். வேதித்தொழில்நுட்ப மாணவா்களுக்கு இக்கருத்தரங்கு நுண்ணறிவு அளிக்கும் என்றாா் அவா்.

வேதித் தொழில்நுட்பத் துறைத் தலைவா் பி. கலைச்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இந்திய வேதித் தொழில்நுட்ப நிறுவனத் தலைவா் எம்.கே. ஜா பங்கேற்று பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின் நவீன தொழில்நுட்பத்தை விவரித்தாா்.

3 நாள் கருத்தரங்கில், காகித விளக்கக் காட்சிகள், வினாடி வினா போட்டி, குயின்ஸ்லாந்து பல்கலை பேராசிரியா் சுரேஷ்குமாா் பாட்டியா, அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் சுதாசத்வா பாபு விரிவுரைகள், மாட்லாப் , ஆஸ்பென் உள்ளிட்ட பயிலரங்குகள், ஆய்வுக் கட்டுரை பயிற்சி ஆகியவை நடைபெறவுள்ளது.

வேதித் தொழில் நுட்பத் துறை பேராசிரியா் டி. கே. ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். மாணவா் தலைவா் பி.ஜே. சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.