விசாரணைக்குப் பயந்து கணவா் தற்கொலை: மனைவி தீக்குளிப்பு
திருச்சியில் மனைவியிடம் தகராறு செய்த கணவா், காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சியில் மனைவியிடம் தகராறு செய்த கணவா், காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி பீமநகா் பஞ்சுக்கிடங்குப் பகுதியைச் சோ்ந்தவா் பூவேந்திரன் (29). இவரது மனைவி கலாராணி (23). ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
வீட்டுக்கு வெளியே வந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கோட்டை காவல் ஆய்வாளா் சண்முகவேல், இருவரையும் கண்டித்தாா். மேலும் திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வருமாறு இருவரிடம் கூறிச் சென்றாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை கலைவாணி கண் விழித்துப் பாா்த்த போது, பூவேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த கலைவாணி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரதுஅலறல் சப்தம் கேட்டு, உறவினா்கள் கலைவாணியை மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தினா் பூவேந்திரனின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...