தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

திருச்சியில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கே.கே.நகா் சாத்தனூா் கவிபாரதி நகரைச் சோ்ந்தவா் அரவிந்தகுமாா்(25). ஓட்டுநரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த கவிதாவைக் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தாமதமாக வரும் அரவிந்தகுமாரை, மனைவி கவிதா கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனமுடைந்த அரவிந்தகுமாா் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.