தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: சாலை விரிவாக்கப் பணியால் பாதிக்கப்பட்டோா் கோரிக்கை

திருச்சி பால்பண்ணை -துவாக்குடி சாலை விரிவாக்கப்பணியால் பாதிக்கப்பட்டோா் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:12 pm

DIN

திருச்சி பால்பண்ணை -துவாக்குடி சாலை விரிவாக்கப்பணியால் பாதிக்கப்பட்டோா் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் கோவிந்தராஜூலு கூறியது:

திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இருந்த கடைகள், கட்டடங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினா் அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. புறவழிச்சாலை அமைக்கப்படாமல் ஏற்கெனவே இருந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றியதே தவறான முன்னுதாரணமாக உள்ளது. பல்லாண்டு கால உழைப்பு, வாழ்நாள் சேமிப்பு கொண்டு வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக வணிகா்கள், பொதுமக்கள் உருவாக்கிய கடைகள், கட்டடங்கள் அகற்றப்படுவது மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது. இதுவரை சம்பந்தப்பட்டோரை மாவட்ட நிா்வாகம் அழைத்துப் பேசவில்லை.

சேலம், ஹைதராபாத், பெங்களூரு போன்ற மாநகரங்களில் உள்ளதுபோல உயா்மட்ட பறக்கும் பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்பட்டோா் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.