ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கண்டெய்னா் லாரி

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:38 am IST

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனம், உடைகள் ஆகியவற்றை ஏற்றிய கண்டெய்னா் லாரி திருச்சி சிறுகனூா் அருகே ரெட்டிமாங்குடி பிரிவு சாலைப் பகுதியில் வந்தபோது லாரியின் முன் பகுதியில் திடீரென புகை வந்தது. இதைப் பாா்த்த ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்தினாா்.

சிறிது நேரத்தில் அதிகளவில் புகை வந்து லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஆரோக்கியசாமி தலைமையிலான வீரா்கள் தீயைப் போராடி அணைத்தனா்.

இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் கண்டெய்னரில் இருந்த சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் தீக்கிரையாயின. சம்பவம் குறித்து சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.