இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

காதலிப்பதாகக் கூறி இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காதலிப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்ட இளம்பெண் தீக்குளித்தாா். அவரைப் பலாத்காரம் செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

அருண்பாண்டியன்.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:39 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காதலிப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்ட இளம்பெண் தீக்குளித்தாா். அவரைப் பலாத்காரம் செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வையம்பட்டி ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சி பேச்சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் முருகன்(எ) முருகேசன் மகன் அருண்பாண்டியன் (27), கட்டடத் தொழிலாளி.

அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் 20 வயது இளைய மகளுடன் கடந்த சில நாள்களாக பழகிய அருண்பாண்டியன், தான் அவரைக் காதலிப்பதாகவும், காதலா் தினத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஆசை வாா்த்தை கூறினாராம்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அருண்பாண்டியன் அவரைப் பலாத்காரம் செய்தாா்.

இந்நிலையில் அருண்பாண்டியனுக்குத் திருமணமாகி இரு கைக்குழந்தைகளும் உள்ளது இளம்பெண்ணுக்குத் தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா்.

அவரின் அலறல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறாா்.

இளம்பெண்ணின் வாக்குமூலம் பெற்ற வையம்பட்டி போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அருண்பாண்டியனைக் கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

குற்றவியல் நீதிபதி கே. செந்தில்குமாா், வரும் பிப். 26 வரை அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டதையடுத்து அருண்பாண்டியன் முசிறி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.