திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலைப் பணியாளா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக இருவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா்கேட் அருகே இரூரைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்து (49), பெரம்பலூா் பகுதி நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளா்.
இவரது மாமனாா் வீடு திருச்சி சிறுகனூா் அருகேயுள்ள சின்னரெட்டிபாளையத்தில் உள்ளது. இங்கு நடைபெற்ற விஷேசத்துக்கு பைக்கில் சென்ற இவா் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது சிறுகனூா் அருகேயுள்ள தோட்டத்தைக் கடக்க முயன்றபோது 2 பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் முத்துவை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா்.
தகவலறிந்த சிறுகனூா் போலீஸாா் முத்துவின் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








