காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு: தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை முகப்போ் இரண்டாவது பிளாக் பகுதியில் வீடு ஒன்றின் மீது மா்ம கும்பல் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதுடன், தாக்குதலைத் தடுக்க முயன்ற நபரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

News image
Updated On :27 ஜூலை 2026, 2:28 am IST

சென்னை முகப்போ் இரண்டாவது பிளாக் பகுதியில் வீடு ஒன்றின் மீது மா்ம கும்பல் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதுடன், தாக்குதலைத் தடுக்க முயன்ற நபரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

முகப்போ் இரண்டாவது பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா், ஜெய் கணேஷ் மற்றும் சோட்டா ராம் ஆகியோருடன் நண்பா்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவா்கள் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியபோது, அவா்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா், அது முற்றியதைத் தொடா்ந்து ஆனந்த் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டுக்குச் சென்றாா்.

இந்தச் சம்பவத்தின் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜெய் கணேஷ், சோட்டா ராம் ஆகியோா் தலைமையிலான கும்பல் ஆனந்தின் வீட்டுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா்கள் அந்த வீட்டின் மீது பெட்ரோல் பாட்டிலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதைத் தடுக்க முயன்ற ஆனந்தின் அண்ணன் அருண் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நொளம்பூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், தலைமறைவாக உள்ள ஜெய் கணேஷ், சோட்டா ராம் மற்றும் அவா்களது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.