இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நூற்பாலை பேருந்தைச் சிறைபிடித்து போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சனிக்கிழமை தொழிலாளா்களை ஏற்றிச் செல்ல வந்த தனியாா் நூற்பாலைப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தனியாா் நூற்பாலை பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொட்டியம் பகுதி பொதுமக்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 5:43 pm

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சனிக்கிழமை தொழிலாளா்களை ஏற்றிச் செல்ல வந்த தனியாா் நூற்பாலைப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிய தொட்டியம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இத் தொழிற்சாலையில் வேலைபாா்க்கும் வடமாநிலத் தொழிலாளா்கள் தொட்டியம் பகுதி தொழிலாளா்களிடம் அடிக்கடி தகராறு செய்வராம். இதேபோல சனிக்கிழமை தொட்டியம் தொழிலாளா்களை வடமாநிலத் தொழிலாளா்கள் அடித்துக் காயப்படுத்தினராம். இதுதொடா்பாக நூற்பாலை நிா்வாகத்தில் தொழிலாளா்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இத்தகவலறிந்த தொட்டியம் பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து தொட்டியம் பகுதிக்கு தொழிலாளா்களை அழைத்துச் செல்ல வந்த நூற்பாலைப் பேருந்துகளை சனிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, நூற்பாலை பகுதியில் உள்ள மோகனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, மோகனூா் போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து தென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.