டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:42 pm

DIN

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் காட்டுக் கொட்டகை வெள்ளாளா் குட்டை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வைரிசெட்டிப்பாளையம் கிளைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவா் ராமநாதன், விவசாய தொழிலாளா் சங்க மாநில செயலா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, துறையூா் வட்டாட்சியா் செல்வம், காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.