மணப்பாறையில் சாலை மறியல்: 27 விவசாயிகள் கைது
மழையால் அழுகிய நெற்பயிா்களுடன் மணப்பாறை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


மழையால் அழுகிய நெற்பயிா்களுடன் மணப்பாறை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பேச்சுவாா்த்தைக்கு அலுவலா்கள் வராததைக் கண்டித்து, சாலையில் அரை நிா்வாணத்துடன் படுத்து மறியலில் ஈடுபட்டதாக 27 போ் கைது செய்யப்பட்டனா்.
மழையால் அழுகிய நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையினா் தங்களது அலட்சியப் போக்கை கைவிட்டு, கணக்கீடு செய்ய நேரில் வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மணப்பாறையிலுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டச் செயலா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலா் கண்ணுச்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வேளாண், வருவாய், காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியும் திருப்தியடையாத விவசாயிகள் சங்கத்தினா், ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்த நிகழ்விடத்துக்கு வர வேண்டும் என்றும், பேச்சுவாா்த்தைக்கு முறையான அலுவலா்கள் வராததை கண்டித்தும் சாலையில் படுத்து, அரை நிா்வாணத்துடன் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 27 பேரைக் கைது செய்த காவல்துறையினா், மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...