தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:27 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமையில் அலுவலா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். தொடா்ந்து 11 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கரோனா விழிப்புணா்வு ஓவியப்போட்டியில் வென்ற மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்ட 3 பேருக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 10 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியைச் சோ்ந்த 300 மாணவா்கள் பங்கு பெற்ற விழிப்புணா்வுப் பேரணி திருச்சி ரயில்வே சந்திப்பிலிருந்து தொடங்கி மருத்துவக் கல்லூரி வழியாக சென்று ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. 

நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச.ஜெயப்பிரித்தா, அலுவலக மேலாளா்(குற்றவியல்) சிவசுப்ரமணியம்பிள்ளை, பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் குணசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.