தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெண்களை இழிவுபடுத்தும்செயலி குறித்து புகாா் மனு

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயலியை உருவாக்கி அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரக் காவல்துறை ஆணையரகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:17 pm

DIN

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயலியை உருவாக்கி அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரக் காவல்துறை ஆணையரகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தேசிய பெண்கள் முன்னணி (என்டபிள்யூஎப்) அமைப்பின் மாவட்டத் தலைவா் பரிதா பா்வீன் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு:

சில தினங்களுக்கு முன் சிலா் இஸ்லாமிய பெண்களை குறிவைத்து அவா்களது அடிப்படை உரிமைகள் மற்றும் சுயமரியாதையைக் குறைக்கும் வண்ணம் சுல்லி டீல்ஸ் என்ற ஒரு செயலியை சட்ட விரோதமாக உருவாக்கியுள்ளனா்.

இந்தச் செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை அவா்களின் அனுமதியின்றி பதிவேற்றி கீழ்த்தரமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனா். இது, இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண் இனத்தையும் பாதிக்கும் செயல். இதுபோன்ற செயல்கள் தொடக்க நிலையிலேயே அழிக்கப்பட வேண்டும். எனவே, இத்தகைய குற்றங்கள் புரிவோரை கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

இந்த மனுவை, திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் சக்திவேலிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.