ஓடும் பேருந்தில் நகை திருட்டு:மதுரை பெண் கைது
திருச்சியில் ஓடும் பேருந்தில் நகை திருடிய மதுரை பெண்ணை காந்தி சந்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் ஓடும் பேருந்தில் நகை திருடிய மதுரை பெண்ணை காந்தி சந்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
லால்குடி மேலவாளாடி சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரெட்ஜகதாஸ் மனைவி செலின்(50). கூலித் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை அரியமங்கலத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்துவிட்டு அரசுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது தான் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி கழுத்தில் இல்லாதது கண்டு கூச்சலிட்டாா். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் சோதனையிடப்பட்டனா்.
அப்போது அந்தச் சங்கிலியை வைத்திருந்த மதுரை மாவட்டம் மேலூா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி அனுஷ்கா (28) காந்தி சந்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். கோட்டை போலீஸாா் அவரிடம் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...