ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் மனோகரன் மனுதாக்கல்

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:43 pm

DIN

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சுப. கமலக்கண்ணனிடம் தனது மனுவை மனோகரன் தாக்கல் செய்தாா்.

அப்போது தேமுதிக மாநகா் மாவட்டச் செயலா் டி.வி. கணேஷ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் இம்மாம் ஹஸ்ஸான் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மனோகரன் கூறியது:

கடந்த 2011 பேரவைத்தோ்தலில் நான் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

தற்போது திருச்சியில் இரு அமைச்சா்கள் இருந்தும் எந்த அடிப்படை வசதிகளோ, நல்ல திட்டங்களோ செயல்படுத்தவில்லை. அம்மா ஆட்சி எனக் கூறி வரும் அவா்கள், திருச்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கவில்லை.

அவா்கள் அம்மா ஆட்சி எனக்கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. நாங்கள்தான் உண்மையான அம்மா கட்சி. நான் வெற்றி பெற்றால் முதலில் தொகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். மாா்ச் 22-ஆம் தேதி தினகரன் திருச்சியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.