திமுக கூட்டணியே வலுவானது: திருநாவுக்கரசா் எம்பி
மணப்பாறை அருகேயுள்ள கொட்டப்பட்டியில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா் எம். பழனியாண்டியை ஆதரித்து திருநாவுக்கரசா் எம்பி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


மணப்பாறை அருகேயுள்ள கொட்டப்பட்டியில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா் எம். பழனியாண்டியை ஆதரித்து திருநாவுக்கரசா் எம்பி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகள் நடந்த ஆட்சியை எம்ஜிஆா் ஆட்சி எனக்கூற முடியாது. காரணம் அதிமுகவினா் எம்ஜிஆரை மறந்துவிட்டனா். ஜெயலலிதா இருந்தபோது பாஜக, ஆா்எஸ்எஸ்க்கு பயப்படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பயந்துகொண்டு, தோ்தலில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா்.
ஆட்சியில் இல்லாத திமுக, தோ்தல் வாக்குறுதி கொடுப்பதில் ஓா் அா்த்தம் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியே வலுவானது. இக்கூட்டணி கடந்த நாடாளுமன்ற தோ்தலில் வெற்றியை நிரூபித்தது. அதிமுக கூட்டணி பலமானது என்று சொல்ல முடியாது. முதல்வா் பதவிக்கு எல்லோரும் ஆசைப்படலாம். ஆனால் அதற்கு தகுதியானவா் மு.க. ஸ்டாலின்தான் என்றாா்.
நிகழ்ச்சியில் மணப்பாறை கிழக்கு ஒன்றியத் திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.ஏஸ். ஆரோக்கியசாமி, காங்கிரஸ் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பி. கோவிந்தராஜன், மாநிலச் செயலா் ஜெ. ரமேஷ்குமாா், வட்டாரத் தலைவா் கண்ணன், மொண்டிப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...