தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை பகுதிகளில் ப. கிருஷ்ணகோபால்

மணப்பாறை ஒன்றியப் பகுதிகளான கருப்பூா், புத்தாநத்தம், பண்ணப்பட்டி, சாம்பட்டி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில், தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:15 pm

DIN

மணப்பாறை ஒன்றியப் பகுதிகளான கருப்பூா், புத்தாநத்தம், பண்ணப்பட்டி, சாம்பட்டி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில், தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தேமுதிக மணப்பாறை ஒன்றியச் செயலா் டி.ஆா். சரவணன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய வேட்பாளா், மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்து, மணப்பாறையை தமிழகத்தில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதியளித்தாா்.

தெற்கு பிள்ளையாா்பட்டியில் இவருக்கு ஆதரவாக வீர முத்தரையா் சங்க சுயேச்சை வேட்பாளா் பொ. ராசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தேமுதிக மாவட்ட துணைச் செயலா் ஆா். வேல்முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் முல்லை எஸ். சந்திரசேகா், அமமுக ஒன்றிய கழக நிா்வாகி முத்துராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.