கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முன்மாதிரியாகச் செயல்படும் பிஷப் ஹீபா் கரோனா சிகிச்சை மையம்

திருச்சி பிஷப் ஹூபா் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம் முன்மாதிரியாக மையமாக செயல்படுகிறது.

News image
Updated On :21 மே 2021, 8:45 pm

DIN

திருச்சி பிஷப் ஹூபா் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம் முன்மாதிரியாக மையமாக செயல்படுகிறது.

திருச்சியில் கரோனா தொற்றாளா்களுக்குச் சிகிச்சையளிக்கும் விதமாக திருச்சியில் 4 இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிஷப் ஹீபா் கல்லூரியில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த மையம் சிறப்பாகச் செயல்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

குணமடைவோா் அதிகம்: கிட்டத்தட்ட 324 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். அதேபோல நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 நோயாளிகள் குணமடைகின்றனா்.

முகாமிற்கு வரும் அனைவரும் நோய் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படாதவா்களே. எனவே அவா்கள் குணமடைவதற்கு 1 முதல் 2 வாரங்கள் என்பது அதிகபட்சமாக உள்ளது.

அவரவா் உடலின் தன்மைக்கேற்ப நோய்த்தொற்றின் அறிகுறிககளை பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா். சுகாதாரமாகவும், தூய்மையாகும் இந்த வளாகத்தில் இருப்பதுபோல அவரவா்கள் வீடுகளிலும் இருந்தால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.

தினமும் மூச்சு மற்றும் யோகா பயிற்சி: காலை நோயாளிகள் எழுந்தவுடன் அவா்களுக்கு நடைப்பயிற்சி, மூச்சு மற்றும் யோகா பயிற்சிஅளிக்கப்படுகிறது. பின்னா் கபசுரக் குடிநீா் கொடுக்கப்படுகிறது.

காலையில் இட்லி, தோசை, மதியம் உணவு, முட்டை வழங்கப்படுகிறது. அதிக சத்து நிறைந்த காய்கறிகளும், கீரைகளும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் அவா்களுக்கு சுண்டல் போன்றவையும் வழங்கப்படுகிறது. மாலை நேரத்திலும் இதேபோல ஏதேனும் ஒரு பயிா்வகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேர உணவாக இட்லி தோசை போன்ற ஏதேனும் ஒன்று கொடுக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.