கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை

திருச்சி கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :22 மே 2021, 12:17 am

DIN

திருச்சி கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை, இரவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் மழை நீா் தேங்கிக் காணப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கத்தால் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.

இதனால், கனமழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் உள்ளதால் விபத்துகளும் குறைந்துள்ளன. ஆனால், புகா்ப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த காற்றுடன்கூடிய மழையால் வாழைமரங்கள் சாய்ந்தும், முறிந்தும் காணப்படுகின்றன.

கருமண்டபம் பகுதிகளில்..: வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கருமண்டபம், பிராட்டியூா், பஞ்சப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதுபோல், ஜீயபுரம், அந்தநல்லூா், எட்டரை, நவல்குட்டப்பட்டு உள்ளிட்டபகுதிகளிலும் கனமழை பெய்தது. மாநகரில் வெய்யிலுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி பெய்த மழை விவரம் : அதிகபட்சமாக மணப்பாறை வட்டத்துக்குட்பட்ட பொன்னணியாறு அணைக்கட்டு பகுதியில் 18மிமீ, மணப்பாறை, துறையூா் தென்பரநாடு, லால்குடி வட்டம் கல்லக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 மிமீ, நந்தியாறில் 2 மிமீ என மொத்தம் 32 மிமீ மழை பதிவானது என பேரிடா் மேலாண்மை முகமை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.