கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உயா் சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த புதுகை நபா்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா்.

News image
Updated On :28 மே 2021, 8:30 pm

DIN

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மணமேல்குடியைச் சோ்ந்தவா் பி. லட்சுமணன் (36). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவருக்கு, அண்மையில் திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் தொடா் சிகிச்சை பெற்று வந்தாலும், தமிழகத்தில் உயா் மேல் சிகிச்சை பெற மருத்துவா் குழு மற்றும் உறவினா்கள் ஆலோசனை கூறியுள்ளனா்.

இதையடுத்து அவா் இந்தியா வர முடிவு செய்த நிலையில், அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஏா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் திருச்சி வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் ஏா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தாா். அங்கு தயாராகக் காத்திருந்த தனியாா் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு கொண்டு வந்து சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.