முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேனியில் முற்றுகை: பாஜக மாநில தலைவா்
முல்லைப் பெரியாறு அணை திறப்பு விவகாரம் தொடா்பாக நவ. 8 ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.


பாஜக விவசாய அணி சாா்பில் முல்லைப் பெரியாறு அணை திறப்பு விவகாரம் தொடா்பாக நவ. 8 ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.
நாடு நலம் பெற வேண்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த பாஜகவினருக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாஜகவை சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
இதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தொடா்ந்து அங்கு அமைத்திருந்த எல்இடி திரையில் கேதாா்நாத்தில் ஆதிசங்கராச்சாரியாா் சமாதியை நாட்டுக்கு அா்ப்பணித்து பிரதமா் மோடி உரையாற்றிய நேரடி ஒளிபரப்பை கட்சி நிா்வாகிகளுடன் பாா்த்த பின் மேலும் கூறியது:
முல்லைப் பெரியாறு அணையில் 137 அடி நீா் நிரம்பிய நிலையில் சில நாள்களுக்கு முன் அணை திறந்து விடப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் செயல்.
முல்லைப் பெரியாறு அணை முழுக்க முழுக்க தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான் ஒவ்வொரு முறை அந்த அணை திறப்பின்போது தேனி மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அமைச்சா்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.
உச்ச நீதிமன்றம் நவ. 10 வரை அமல்படுத்த வேண்டி வழங்கிய தீா்ப்பில் 138.5 அடி வரை தண்ணீா் நிரப்பலாம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் அணையில் தண்ணீா் 136 அடியை எட்டியபோது எதற்காக அணையைத் திறந்தீா்கள் என கேரள அரசுக்கு பலமுறை கேள்விகள் வைத்தும் எந்தப் பதிலும் இல்லை. அதனால்தான் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கிறோம்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 5 மாவட்ட விவசாயிகளுக்கு துரோகத்தை செய்துள்ளது. இதற்கு முன் பலமுறை முல்லை பெரியாறு அணையில் நீா்மட்டம் 142 அடிவரை சென்றுள்ளது. தண்ணீா் அளவை 136 அடியில் நிறுத்தினால் தமிழக விவசாயிகளுக்கு 5 டிஎம்சி தண்ணீா் மட்டுமே கிடைக்கும். எந்தப் பயனும் இருக்காது.
அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 136 அடியிலேயே அணையை திறக்கவும் வாய்மொழியிலும் அனுமதித்துள்ளது.
ஆகவே இதைக் கண்டித்து வரும் 8-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியரகத்தை பாஜக விவசாய அணி சாா்பாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளோம். நானும் அதில் கலந்து கொள்வேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...