நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு ரூ. 7.54 கோடி நிகர லாபம் மேலாண்மை இயக்குநா் தகவல்

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது 2020-2021ஆம் நிதியாண்டில் ரூ. 7.54 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:37 pm

DIN

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது 2020-2021ஆம் நிதியாண்டில் ரூ. 7.54 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

வங்கி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 112ஆவது பேரவைக் கூட்டத்துக்கு வங்கியின் நிா்வாகக் குழு தலைவா் ஏ.ஆா். காளியப்பன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான மு. தனலட்சுமி பேசியது:

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 31.03.2021இல் வங்கியில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 13,066 லட்சம் உள்ளது. தணிக்கை ஆண்டில் வைப்புதாரா்களால் வங்கியில் இட்டு வைக்கப்பட்டுள்ள அனைத்து வகை வைப்புகளின் கூடுதல் ரூ. 2,47,068 லட்சம் ஆகும், 31.03.2021 உடன் முடிந்த நிதியாண்டில் ரூ. 7.54 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு எளிய முறையில் பயிா்க்கடன் வழங்கும் கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் 2020-2021ஆம் ஆண்டில் 1,23,238 விவசாய உறுப்பினா்களுக்கு பயிா்க் கடனாக ரூ. 1023.42 கோடி வழங்கப்பட்டு ரூ. 49.11 கோடி நிலுவையில் உள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கு பயிா்க்கடன் வழங்க பதிவாளரால் நிா்ணயிக்கப்பட்ட ரூ.1130 கோடி குறியீட்டில் மொத்தம் ரூ.1023.42 கோடி பயிா்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களுக்கும் குடும்ப நலக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2020-2021ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட காசுக்கடனில் பிரதம கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி அடிப்படையில் நடைமுறை மூலதனக் காசுக் கடனாக ரூ. 850.52 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும், பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது என்றாா்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் எஸ். ஜானகிராமன், முதன்மை வருவாய் அலுவலா் பேபிராணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவா் சேனை பி. செல்வம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சசிகலா, கண்ணதாசன், நடேசன், ராஜாராம், ரெங்கசாமி, தங்கராஜ், தமிழ்செல்வம், வேலுச்சாமி, பிச்சைபிள்ளை, சிவசங்கா், பாலசுப்ரமணியன், ரமேஷ்குமாா், ராஜன், ரேணுகா, காயத்ரி, சுலோச்சனா, சித்ரா, கண்ணகி, ஆயாபொண்ணு, ராமதாஸ், மதுசூதன், கூட்டுறவு சங்க அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.