மலைவாழ் மக்களுக்கான குடும்ப அட்டை வழங்க நவ.17இல் சிறப்பு முகாம்
மலைவாழ் மக்களுக்கான குடும்ப அட்டைகள் வழங்கும் வகையில் வரும் 17ஆம் தேதி இரு இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


மலைவாழ் மக்களுக்கான குடும்ப அட்டைகள் வழங்கும் வகையில் வரும் 17ஆம் தேதி இரு இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசால் தற்போது நல்ல முறையில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலைவாழ் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் மலைவாழ் பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை பெற ஏதுவாக துறையூா் வட்டம், டாப்செங்காட்டுப்பட்டி, சின்ன இலுப்பூா் ஆகிய இரு இடங்களில் வரும் 17ஆம் தேதி காலை 11 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், அன்றைய தினத்திலேயே ஆதாா் சிறப்பு முகாமும் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாமில் அளிக்கும் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்ப ஆவணங்களை மேற்படி முகாமிலேயே இணையதள முகவரியில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...