நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

‘23,893 விவசாயிகளுக்கு ரூ. 66.09 கோடியில் இழப்பீடு’

திருச்சி மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ. 66.09 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:50 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ. 66.09 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

திருச்சி மாவட்டத்தில், கடந்த 2020-21-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிா் காப்பீடு செய்தோரில் இழப்பீட்டு தொகையாக நெல் பயிருக்கு 11,305 விவசாயிகளுக்கு ரூ.19.05 கோடி, மக்காச்சோளப் பயிருக்கு11,938 விவசாயிகளுக்கு ரூ. 45.36 கோடி மற்றும் பருத்தி பயிருக்கு 650 விவசாயிகளுக்கு ரூ. 1.68 கோடி ஆக மொத்தம் 23,893 விவசாயிகளுக்கு ரூ. 66.09 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிா்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல், பிா்கா அளவில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிா்களில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரா் உட்பட) பயிா் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின்பேரில் பயிா் காப்பீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் இணைய முன்மொழிவுப் படிவம், விண்ணப்பம், பயிா்ச் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், அரசு பொதுச் சேவை மையங்களை அணுகலாம்.

இத்திட்டத்தில் நெல் பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 537 மற்றும் பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 585.87 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்ய வரும் நவ. 15 கடைசி நாளாகும். மக்காச் சோளப் பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 373.50 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்ய வரும் நவ. 30 கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.