தடுப்பூசி சாதனைக்கு பாஜகவினா் பாராட்டு
நாடு முழுவதும் சுமாா் 100 கோடி தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டும் விதமாக திருச்சி, அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் சுமாா் 100 கோடி தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டும் விதமாக திருச்சி, அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் 100 கோடி தடுப்பூசி தந்த பிரதமா் மோடிக்கும், இரவு பகலாக கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோருக்கும் பாராட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து திருச்சி நகர மாவட்ட பாஜக மருத்துவ குழுவினா் சாா்பில், மருத்துவக் கல்லூரி முதல்வா்வனிதா, துணை மருத்துவ அலுவலா், செவிலியா்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனா். நிகழ்வில் மாவட்ட மகளிரணி தலைவா் ஆா். புவனேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவா் சி. இந்திரன், பொன்மலை மண்டலத் தலைவா் ஆா். இளங்கோ, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...