உ.பி. வன்முறையில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
உ.பி. வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் படங்களுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


உ.பி. வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் படங்களுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் உ.பி. வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் படங்களுக்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில், தமிழ்மாநில விவசாயிகள் சங்க பொருளாளா் என். ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ். செல்வம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. கெளசல்யா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்க நிா்வாகிகள் ராஜவேல், பாபு, பாரமசிவம் மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...