எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சீட்டு நிறுவன மோசடி: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் தனியார் சீட்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்கள்.
Updated On :6 செப்டம்பர் 2021, 9:33 am

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் தனியார் சீட்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்கணேசன் என்பவர் தனது நண்பர்கள் தேக்கமலை மற்றும் தீனதாயாளன் ஆகியோருடன் இணைந்து சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பல வாடிக்கையாளர்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்து வந்த நிலையில், நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை திருச்சி பொருளாதாரா குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி ஜனனிபிரியா, ஒரு மாத காலத்திற்குள் வழக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.