இன்று கைவினைப் பொருள் கண்காட்சி
குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சிப் பயன்பாடு என்பதை விளக்கிடும் வகையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.


குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சிப் பயன்பாடு என்பதை விளக்கிடும் வகையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாநகராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர திருநாளையொட்டி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பொதுமக்கள், மறுசுழற்சி உற்பத்தியாளா்கள், கைவினைப் பொருள் கலைஞா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் தங்களது கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்தவுள்ளனா்.
இதில் சிறந்த கைவினைப் பொருளை காட்சிப்படுத்திய கலைஞருக்கு பரிசு வழங்கப்படும். மேலும், மாநகராட்சி வழங்கும் சான்றிதழ்களை பெற்று தங்களது கைவினை பொருள்களுக்கு தகுந்த அங்கீகாரம் பெற்றுப் பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...