திருச்சி அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி: மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
திருச்சியில் வாய்க்காலில் குளித்த சிறுவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.


திருச்சியில் வாய்க்காலில் குளித்த சிறுவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை பகலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஜெட்டின் (13), முருகேசன் மகன் கமல் (12), சிவகுமார் மகன் கௌதம் (14) சஞ்சய் (15) உள்ளிட்டோர் குளித்துள்ளனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெட்டின், கமல், கௌதம் மூவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைக்கண்ட சஞ்சய் அங்கிருந்து தப்பியதுடன், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தான். உடன் இதுகுறித்து நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் உறவினர்கள ஜெட்டின் உடலை மீட்டதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கமல் மற்றும் கௌதம் இருவரையும் மீட்டனர்.
கமல் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கௌதம் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...