மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி
சமரச தீா்வு மையத்தின் 17-ஆம் அண்டு தினத்தையொட்டி, மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.


சமரச தீா்வு மையத்தின் 17-ஆம் அண்டு தினத்தையொட்டி, மணப்பாறையில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணியை ஒருங்கிணைந்த சாா்பு நீதிபதி ஜி. மணிகண்டராஜா, குற்றவியல் நடுவா் சி. கருப்புசாமி ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். தொடா்ந்து சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினா்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சமரச தீா்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...