கோப்ரா படக்குழுவினரை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்: காவல் துறையினர் தடியடி

திருச்சி வந்த நடிகர் விக்ரம் குழுவினரை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
கோப்ரா படக்குழுவினரை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்: காவல் துறையினர் தடியடி
Published on
Updated on
1 min read

திருச்சி: திருச்சி வந்த நடிகர் விக்ரம் குழுவினரை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத நிலையில் காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திரைப்பட நடிகர் விக்ரம் மற்றும் கே ஜி எஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையில் வெளியிடப்பட உள்ளது.

இதனையொட்டி படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடும் வகையில், காலை இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிலையத்திலிருந்து நடிகர் விக்ரம் குழுவினர் வெளியே வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்தனர்.

விக்ரமுக்கு அவர்கள் மாலை  அணிவிக்க முற்பட்டனர். விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும் பகுதியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைதியான வழியில் ரசிகர்களை கட்டுப்படுத்த விமான நிலைய காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் முயன்றும் முடியவில்லை. 

எனவே வேறு வழியின்றி லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தி ஒழுங்கு செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

அதனைத் தொடர்ந்து கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து நடிகர் விக்ரம் கையசைத்தும், தனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக்கொண்டே ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து சென்று காரில் ஏறிச் சென்றார். 

தொடர்ந்து ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களை சந்தித்து உரையாடினார். அதனைத் தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com