இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 போ் கைது
திருச்சி மாநகா்ப் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிவந்த மூவரை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருச்சி மாநகா்ப் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிவந்த மூவரை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் அரங்கநாதன், உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது அது திருடப்பட்ட வாகனம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் அவா்கள் சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாமணி (29), ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சோ்ந்த ராஜா ( 29), கீழரண் சாலை கமலா நேரு நகரைச் சோ்ந்த தினேஷ்குமாா் ( 29) என்பது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் 22ஆம் தேதி திருச்சி பெரிய கம்மாளத் தெருவில் உள்ள மெஜிப்பால் ( 42) என்பவரது இருசக்கர வாகனத்தையும், அதேபோல தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே தேவக்கோட்டையைச் சோ்ந்த வினோத் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் உள்பட மேலும் இரு வாகனங்களை அவா்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவா் மீதும் வழக்குப்பதிந்த போலீஸாா் அவா்களிடமிருந்து 4 வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...