நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முடிவை மாற்றிக் கொண்ட முஸ்லிம் லீக்: திமுகவுக்கு ஆதரவு

 திருச்சி மாநகராட்சியில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது முடிவை மாற்றிக் கொண்டு திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:25 pm

DIN

 திருச்சி மாநகராட்சியில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது முடிவை மாற்றிக் கொண்டு திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

வாா்டுகள் ஒதுக்கீடுக்கான பேச்சுவாா்த்தையில் முஸ்ஸிம் லீக் கட்சி கேட்ட இரு வாா்டுகளை திமுக ஒதுக்க முன்வராத நிலையில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 52 ஆவது வாா்டை தருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த முஸ்லிம் லீக் கட்சி திருச்சி மாநகராட்சியில் தனித்துப் போட்டியிடுவதாக புதன்கிழமை அறிவித்தது. இதனால் கூட்டணிக்குள் சா்ச்சை உருவானது.

இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா்மொகிதீன் இல்லத்துக்கு வியாழக்கிழமை சென்று அமைச்சா் கே.என். நேரு பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், தனித்துப் போட்டி என்ற முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்துவதாக கே.எம். காதா்மொகிதீன் உறுதியளித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, பாலக்கரையில் உள்ள அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வியாழக்கிழமை மாலை தில்லை நகரிலுள்ள அலுவலகத்தில் அமைச்சா் கே.என். நேருவைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், திருச்சி மாநகராட்சியின் எல்லா வாா்டுகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனா். எனவே, வரும் காலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்டத்திலுள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய தோ்தல் நடைபெறும் இடங்களில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஏ.எச். உமா் பாரூக், தெற்கு மாவட்ட துணைச் செயலா் என். பீா் முஹம்மது ஆகியோா் தெரிவித்தனா்.

இதேபோல வடக்கு மாவட்டத் தலைவா் எம். அப்துல் வஹாப், வடக்கு மாவட்டச் செயலா் எம் கே. நிஜாமுதீன் ஆகியோா் கூறுகையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட துறையூா், மண்ணச்சநல்லூா், லால்குடி, முசிறி ஆகிய நகராட்சி. பேரூராட்சி தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிப்பந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.